கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் வழிப்பறி: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
னம்பாக்கத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ததாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைதானார்கள்.
ஆலந்தூர்,
மீனம்பாக்கத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ததாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைதானார்கள்.
என்ஜினீயரிடம் வழிப்பறிசென்னையை அடுத்த பழவந்தாங்கல் பி.வி.நகரை சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர்(வயது23). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்றுமுன்தினம் அதிகாலையில் தஞ்சாவூருக்கு செல்ல பழவந்தாங்கலில் இருந்து மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது 2 பேர் கத்தியை காட்டி மனோஜ் பிரபாகரிடம் இருந்து தங்க சங்கிலி, செல்போன் மற்றும் மணிபர்சை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.
கல்லூரி மாணவர் கைதுஆனால் மனோஜ்பிரபாகர் விடாமல் பொருட்களை தருமாறு அவர்களிடம் கேட்டார். உடனே அவர்கள் கத்தியை காட்டி ஒட முயன்றனர். அந்த நேரத்தில் ரெயில் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் இதைக்கண்டனர். உடனே அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து மீனம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது பிடிபட்ட 2 பேரும் பழவந்தாங்கல் பி.வி.நகரை சேர்ந்த சஞ்சய்(20), சுரேஷ்பாபு(19) என தெரியவந்தது. சஞ்சய் தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தில் பயணி சாவு* மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் சோதனைகளை முடித்துக் கொண்டு ஏறி அமர்ந்த இலங்கையை சேர்ந்த பயணி கனகலிங்கம்(62) மாரடைப்பால் இறந்தார். இதுபற்றி இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 30 நிமிடம் விமானம் தாமதமாக புறப்பட்டது.
* கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிடந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
* ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
லாரி டிரைவர் சாவு* திருவான்மியூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய பிரதாப்(25), பாரதி(20) ஆகிய 2 பேரை ரோந்து போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
* மதுரையை சேர்ந்த லாரி டிரைவரான கோகுல்நாத்(26) நேற்று செங்குன்றத்தில் இருந்து கோழிகளை ஏற்றி சென்றபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது லாரி மோதிய விபத்தில் அவர் இறந்தார்.