10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்


10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அச்சன்புதூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். துணை தலைவர் முகம்மது காசிம் இறை வணக்கம் செய்தார். மாவட்ட செயலாளர் இக்பால் வரவேற்றார். மாநில பொது செயலாளர் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய இணை செயலாளர் முகம்மது அல்-அமீன், மாவட்ட கவுரவ தலைவர் எம்.எஸ். துராப்ஷா, துணை செயலாளர் அப்துல் வகாப், கடையநல்லூர் நகர செயலாளர் அப்துல் லத்தீப், மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாணவி அனிதா மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பது. நீட் தேர்வில் பிடிவாத போக்கில் செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது. கடையநல்லூர் இக்பால் நகர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் உள்ள முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகர எல்லையில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிர்வாகிகள் அப்துல் வகாப், அமானுல்லா, எம்.சாகுல் அமீது, செய்யது மசூது, ரஹ்மத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story