அரியலூரில் கிருஷ்ணசாமி உருவப்பொம்மையை எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
வி.கைகாட்டி, அரியலூரில் கிருஷ்ணசாமி உருவப்பொம்மையை எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி ஜங்சன் பகுதியில் நேற்று தி.மு.க.வினர் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் உருவப்பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் ராம ராஜன் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா விவகாரத்தில் அரியலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கரை கைது செய்து, சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும் என கிருஷ்ணசாமி கூறினார். இதையடுத்து கிருஷ்ணசாமியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி அவரது உருவப் பொம்மையை எரித்து தி.மு.க.வினர் கோஷம் போட்டனர். இதில் மாணவரணி துணை அமைப்பாளர்கள் சக்திவேல், சுரேஷ், விநாயகவேலன், செல்வகுமார் மற்றும் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பத்ம நாதன் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
அரியலூரில்...
இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உருவப் பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் இளையராஜா, பொது குழு உறுப்பினர் பாலு உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story