ஆதம்பாக்கத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை


ஆதம்பாக்கத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 6 Sep 2017 10:00 PM GMT (Updated: 6 Sep 2017 7:04 PM GMT)

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது48).

ஆலந்தூர்,

இவர் சென்னை மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் திருவண்ணாமலைக்கு சென்றார். இதையடுத்து கீழ்தளத்தை பூட்டிவிட்டு மேல் தளத்தில் வெங்கடேசனின் மனைவி மற்றும் குழந்தைகள் படுத்திருந்தனர்.

நேற்று காலை வெங்கடேசன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கீழ்தளத்தில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் மற்றும் விலையுர்ந்த டெலிவி‌ஷன் பெட்டி ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story