‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கும்பகோணத்தில் மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நடந்தது


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கும்பகோணத்தில் மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 6 Sep 2017 11:00 PM GMT (Updated: 6 Sep 2017 9:49 PM GMT)

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கும்பகோணத்தில் நேற்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 4-ந் தேதி அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.

இதையொட்டி வகுப்புகளை புறக்கணித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கும்பகோணம் நேட்டிவ் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பேரணியாக காந்தி பூங்கா நோக்கி சென்றனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் அப்புறப்படுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் பெண்கள் கல்லூரியில் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவிகள், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story