நீர் தேர்வுக்கு எதிர்ப்பு மாணவர்கள் சாலை மறியல்


நீர் தேர்வுக்கு எதிர்ப்பு மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:49 AM IST (Updated: 8 Sept 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் மாணவர்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் தமிழகம்–புதுச்சேரியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் மாணவர்களது போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது.

நேற்றும் பெரும்பாலான அரசு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். புதுவை சமுதாயக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து லாஸ்பேட்டையில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை மடுவுபேட் சந்திப்பில் திடீரென சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங், இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

இதேபோல் தமிழர் அதிகாரம் அமைப்பினர் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தமிழன் மீரான், கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story