ஆனைமலை அருகே நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
ஆனைமலை கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை,
ஆனைமலையை அடுத்துள்ள ஸ்ரீராமு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் 50–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தமிழகத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், தமிழகத்தில் நீட் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாக உள்ளது. மாணவி அனிதா போன்ற உயிர்கள் மேலும் பலியாவதை தடுக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் பூரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். மாணவி அனிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இந்த போராட்டம் 1 மணிநேரம் நடந்தது.
Related Tags :
Next Story