வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இணைப்பு
மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் தினசரி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை,
மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் தினசரி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து பல்லவன் எக்ஸ்பிரசாக காரைக்குடி வரை இயக்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இந்த ரெயிலில் உணவு தயாரிக்கும் பெட்டிகள் இணைக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, உணவு தயாரிக்கும் பெட்டி ரெயிலில் இணைக்கப்பட உள்ளது. அதன்படி, மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், சென்னை–காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் வருகிற 11–ந் தேதி முதல் உணவு தயாரிக்கும் பெட்டி இணைக்கப்படுகிறது. அத்துடன், இந்த ரெயில்களில் ஒரு பொதுப்பெட்டி துண்டிக்கப்பட்டு அதற்கு பதிலாக இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story