‘நீட்’ தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த திண்டிவனம் ஆசிரியை உண்ணாவிரதம்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த திண்டிவனம் ஆசிரியை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அவரை தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவருடைய மனைவி சபரிமாலா (வயது 35). இவர் ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றினார். அதே பள்ளியில் இவர்களது மகன் ஜெயசோழன் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆசிரியை சபரிமாலா ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கடந்த 6-ந்தேதி திடீரென தனது மகனுடன் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஆசிரியை தனது வேலையை ராஜினாமா செய்வதாக கூறி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனிடம் அதற்கான கடிதத்தையும் அவர் கொடுத்தார். இந்நிலையில் தனது வீட்டில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஆசிரியை சபரிமாலா அறிவித்தார்.
அதன்படி நேற்று காலை 8.50 மணிக்கு தனது வீட்டின் முன்பு சபரிமாலா உண்ணாவிரதத்தை தொடங்கினார். நாடு முழுவதும் ஒரே கல்வி, நமது குழந்தைகளின் கல்விக்காக தமிழர்கள் நாம் கைகோர்ப்போம், அனிதாவுக்கு நேர்ந்த நிலை இனி யாருக்கும் ஏற்பட கூடாது, நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் ஒரே கல்வி முறையில் தான் படிக்க வேண்டும் என்கிற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த விழிப்புணர்வு பதாகையுடன் அமர்ந்திருந்தார். அதில் மாணவி அனிதாவின் படங்களும் இருந்தன.
இதற்கிடையே சபரிமாலா உண்ணாவிரதம் இருப்பது பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சபரிமாலாவை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து, உண்ணாவிரத போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் தாசில்தார் சசிகலா ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது சப்-கலெக்டர் பிரபு சங்கர் சபரிமாலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வீட்டில் தன்னிச்சையாக போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள், கூட்டத்தை சேர்க்க கூடாது என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து சபரிமாலா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அவர் சப்-கலெக்டரிடம் மாலையில் தனது போராட்டத்தை முடித்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.
மாலையில் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ‘நீட்’ தொடர்பாக யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நீங்கள் போராட்டத்தை முடிக்காவிட்டால் கைது செய்வோம் என்று தெரிவித் தார். இதையடுத்து சபரிமாலா தனது போராடத்தை முடித்து கொள்வதாக தெரிவித்தார். அதன்படி மாலை 4.50 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன் அவருக்கு பழச்சாறு கொடுத்து, போராட்டத்தை முடித்து வைத்தார்.
இதனிடையே ஆசிரியை சபரிமாலா வீட்டுக்கு வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய அளவில் கல்வியில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும். கல்வித்துறையில் உள்ள முரண்பாடுகளை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வி பாடத்திட்டத்தின் கீழ் படிப்பதற்கான வகைப்பாடுகளை கொண்டு வர வேண்டும். இதற்கு அடித்தளமிட்டு இருக்கிறார்கள் மாணவி அனிதா, ஆசிரியை சபரிமாலா. அனிதா தன்னை மாய்த்துக்கொண்டு உயிர்தியாகம் செய்து செய்துள்ளார். இன்னும் 23 ஆண்டுகள் உள்ள அரசு ஆசிரியர் பணியை சபரிமாலா தியாகம் செய்து இருக்கிறார். ஆசிரியர் சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாக சபரிமாலா, இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இவரது போராட்டம் வெற்றியடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று முழுமையான ஆதரவை கொடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் டாக்டர் மாசிலாமணி, திண்டிவனம் சீத்தாபதி சொக்கலிங்கம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தென்களவாய்பழனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், விக்கிரவாண்டி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி ஆகியோரும் ஆசிரியையை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story