ஆவடியில் கள்ளக்காதல் தகராறில் பூ வியாபாரி கொலை வீட்டுக்குள்ளேயே உடலை புதைத்துவிட்டதாக தகவல்
கள்ளக்காதல் தகராறில் பூ வியாபாரி கொலை செய்யப்பட்டு, வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவடி,
சென்னையை அடுத்த ஆவடி, காமராஜர் நகர், ராமலிங்கம் 3-வது தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 38). இன்னும் திருமணம் ஆகாத இவர் ஆவடி ரெயில் நிலையம் அருகே ஒரு பூக்கடையில் வேலை செய்துவந்தார். கடந்த 2-ந்தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சுந்தரம், பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து சுந்தரத்தின் தாய் யசோதா (60) ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர்.
இந்நிலையில், ஆவடி கவுரிபேட்டை கள்ளுக்கடை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திவான் (32) என்பவரது வீட்டில் சுந்தரம் கொலை செய்யப்பட்டு, வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டிருப்பதாக ஆவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு திவான் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
சுந்தரத்துக்கும் கவுரிபேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி (36) என்ற பூ வியாபாரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துவந்தது. பின்னர் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் (26) இறந்துவிட்டதால் அவரது மனைவியான அமுதாவுடனும் சுந்தரத்துக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜேஸ்வரியுடன் இருந்த தொடர்பை கைவிட்டு, அமுதாவுடன் சுந்தரம் நெருக்கமாக இருந்துவந்தார். ஆனால் சுந்தரத்தின் நடவடிக்கை பிடிக்காத அமுதா, அவரை கழற்றிவிட்டு திவானுடன் நெருக்கமாக பழகிவந்தார். இதனால் சுந்தரத்துக்கும் அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ராஜேஸ்வரி சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு சுந்தரத்தை அமுதா வீட்டுக்கு போகலாம் வா என்று கூறி திவான் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் ராஜேஸ்வரி, அமுதா, திவானின் தாய் ரகிமா கனி (48) ஆகியோர் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டனர்.
திவான் மற்றும் அவரது நண்பர் கோபி (ஆட்டோ டிரைவர்) ஆகிய இருவரும் சேர்ந்து சுந்தரத்தை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்துவிட்டனர். அடையாளம் தெரியாமல் இருக்க அந்த இடத்தில் சிமெண்டு போட்டு பூசிவிட்டனர்.
போலீசார் சுந்தரத்தை தேடுவதை அறிந்த திவானின் தாய் ரகிமா கனி இத்தகவலை போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. போலீஸ் துணை கமிஷனர் சர்வேஸ்ராஜ் உத்தரவின்பேரில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரி, அமுதா, ரகிமா கனி ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகிறார்.
தலைமறைவாக உள்ள திவான், கோபி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திவான் பிடிபட்ட பின்னரே சுந்தரம் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டாரா? அப்படி கொலை செய்யப்பட்டிருந்தால் வீட்டுக்குள் எந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story