அந்தியூர் பகுதியில் பலத்த மழை: வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு


அந்தியூர் பகுதியில் பலத்த மழை: வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
x
தினத்தந்தி 9 Sep 2017 11:00 PM GMT (Updated: 9 Sep 2017 7:39 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மாலை நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்தது.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12 மணி வரை பலத்த மழையாக நீடித்தது. இதேபோல் அந்தியூர் அருகே எண்ணமங்கலம், கோவிலூர், செல்லம்பாளையம், வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22½ அடியாக இருந்த வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 25 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் நீர்மட்டம் 2½ அடி உயர்ந்தது.


Related Tags :
Next Story