கோத்தகிரி பகுதியில் பழங்குடியினர் கிராமங்களில் கலெக்டர் ஆய்வு


கோத்தகிரி பகுதியில் பழங்குடியினர் கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 9 Sep 2017 7:40 PM GMT)

கோத்தகிரி பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பழங்குடியின மக்கள் வெவ்வேறு இடங்களில் கோழிப்பண்ணை மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், அரக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பழங்குடியினர் கிராமங்களான கரிக்கையூர், பங்களாபடிகை ஆகிய கிராமங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பழங்குடியினருக்கு கோழிப்பண்ணை அமைப்பதற்கான இடம், கடினமாலா ஊராட்சிக்கு உட்பட்ட கோத்திமுக்கு கிராமத்தில் வீட்டு தோட்டம் அமைப்பதற்கான இடத்தையும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த திட்டம் குறித்து பழங்குடியினர் இடையே எடுத்துக்கூறி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மெட்டுக்கல் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் உணவு இருப்புகள் மற்றும் சமையலறையை பார்வையிட்டார். பின்னர் அந்த பள்ளி மாணவ–மாணவிகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார். சோலூர்மட்டம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். இதில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, உதவி இயக்குனர் (கிராம ஊராட்சி) மேகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story