வகுப்பறையை பூட்டி தலைமை ஆசிரியரை அனுமதிக்க மறுப்பு
விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமைஆசிரியராக இருப்பவர் தங்கமணி.
விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமைஆசிரியராக இருப்பவர் தங்கமணி (வயது 48). இவர் நேற்று காலை பள்ளிக்கு சென்ற போது அவர் வழக்கமாக பாடம் எடுக்கும் 5–ம் வகுப்பு அறை பூட்டப்பட்டு இருந்தது. தலைமைஆசிரியர் தங்கமணி தனது வகுப்பில் உள்ள குழந்தைகளை பள்ளி வளாகத்திலேயே வேறு ஒரு இடத்தில் அமர வைத்து பாடம் நடத்தினார்.
இதற்கு இடையில் தலைமைஆசிரியர் தங்கமணி, 2 மாத காலத்திற்கு பல்வேறு புகார்களின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையில் அறிவிப்பு தகவலை ஒட்டி இருந்தனர். தலைமைஆசிரியர் தங்கமணி இப்பிரச்சினை குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார். எனினும் பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர் தங்கமணியை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது. விதிமுறைப்படி தலைமைஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.