நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 427 வழக்குகளுக்கு தீர்வு


நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 427 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட 6 ஆயிரத்து 684 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தொடங்கி வைத்தார்.

இதில் 427 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.7 கோடியே 27 லட்சத்து 41 ஆயிரத்து 125 கொடுத்து சமரச தீர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.


Next Story