நாமக்கல் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு


நாமக்கல் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-10T02:43:17+05:30)

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டி ஜங்களாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது தோட்டத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தண்டு பகுதியில் இருந்து பால் வடிய தொடங்கியது.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டி ஜங்களாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது தோட்டத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தண்டு பகுதியில் இருந்து பால் வடிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் பரவியதும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதையடுத்து பெண்கள் அந்த மரத்தில் மஞ்சள், குங்குமம் தடவி வழிபாடு செய்ய தொடங்கினர். அப்போது சில பெண்கள் சாமி வந்து ஆடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story