வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன கலெக்டர் தகவல்


வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களுடன் கலெக்டர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து மீட்புப்பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள முதன்மை செயல்பாட்டாளர்களுடானான கூட்டம் நடைபெற்றது.

மீட்பு பணிக்குழுவினர் தயாராக...

பின்னர் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் மொத்தம் 47 கிராமங்கள் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, பெரம்பலூர் வட்டத்தில் 6 கிராமங்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 17 கிராமங்களும், குன்னம் வட்டத்தில் 13 கிராமங்களும் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் 11 கிராமங் களும் வெள்ளம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட் டுள்ளன.

அதன்படி, மேற்கண்ட 47 கிராமங்களில் மீட்பு பணியை மேற்கொள்ளும் வகையில் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை இடர்பாடு பற்றி இலவச தொலைபேசி எண்களான 1077 மற்றும் 18004254556 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) மனோகரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story