தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 711 வழக்குகள் சமரச தீர்வு உரியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டன


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 711 வழக்குகள் சமரச தீர்வு உரியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 9 Sep 2017 9:16 PM GMT)

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 711 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ரூ.11 கோடியே 94¼ லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டன.

கரூர்,

கரூர் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மக்கள் நீதிமன்றத்தை மகளிர் கோர்ட்டு நீதிபதியும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான சசிகலா தொடங்கி வைத்தார். வங்கி காசோலை, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சிவில் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தம் 3 அமர்வுகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.

இதில் தலைமை குற்றவியல் நீதிபதி பார்த்தசாரதி, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தங்கவேல், முதன்மை சார்பு நீதிபதி மணி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நாகராஜ், விரைவு நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன், வக்கீல்கள் பாண்டியன், சிவக்குமார், சமூக ஆர்வலர்கள் சொக்கலிங்கம், சாமியப்பன் ஆகியோர் கொண்ட அமர்வினர் வழக்குகளை விசாரித்தனர்.

711 வழக்குகள் சமரச தீர்வு

இதேபோல குளித்தலை கோர்ட்டிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. சார்பு நீதிபதி அகிலாஷாலினி, வக்கீல் சீனிவாசன், சமூக ஆர்வலர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கரூர் மற்றும் குளித்தலை கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசார ணைக்காக மொத்தம் 5 ஆயிரத்து 631 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 711 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன. உரியவர்களுக்கு மொத்தம் ரூ.11 கோடியே 94 லட்சத்து 24 ஆயிரத்து 280 நிவாரணம் வழங்கப்பட்டன. 

Related Tags :
Next Story