மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு- தமிமுன் அன்சாரி ஆறுதல்
அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு- தமிமுன் அன்சாரி ஆறுதல்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய குடும்பத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனிதாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆறுதல் கூறினர். பின்னர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் சூழ்ச்சிக்கு மாநில அரசு பலி ஆகிவிட்டது. அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்துவதை டாக்டர் கிருஷ்ணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் பாடம் கற்பிப்பார்கள், என்று கூறினார். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறுகையில், மக்கள் எழுச்சி போராட்டத்தை யாராலும் ஒடுக்க முடியாது. மக்களின் நியாயமான கோரிக்கை வென்றே தீரும். உண்மையாக போராடுபவர்களை, சமூக விரோதிகள் என்று கூறி கொச்சைப்படுத்த கூடாது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம், என்றார்.

Related Tags :
Next Story