பிளஸ்–2 மாணவியை ஊட்டிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


பிளஸ்–2 மாணவியை ஊட்டிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Sep 2017 10:15 PM GMT (Updated: 9 Sep 2017 9:25 PM GMT)

பிளஸ்–2 மாணவியை ஊட்டிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை,

திருவட்டார் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு மாணவி, இரணியல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.

அப்போது, மாறாங்கோணம் பகுதியை சேர்ந்த பினு (வயது25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பினு அவ்வப்போது மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

கடந்த 5–ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் இரண்டு தினங்கள் கடந்து மாணவி வீடு திரும்பினார். அப்போது பினு தன்னை ஊட்டிக்கு கடத்தி சென்றதாகவும், அங்கு வைத்து திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர், தன்னை பரிதவிக்க விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் பினு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் பினு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story