ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை அமைச்சர் கந்தசாமி பேச்சு
ஏழை எளிய மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறையில் பணிபுரிந்து வரும் 11 நல ஆய்வாளர்கள் நல அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான பதவி உயர்வு ஆணையை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். அப்போது ஆதிதிரா விடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதுவை அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எந்த திட்டத்தையும் தற்போது நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது.
கடந்த ஆட்சியாளர்கள்தான் இந்த நிலைக்கு காரணம். ஆடம்பரமான திட்டங்களை நிறைவேற்ற பல்வேறு துறைகளில் இருந்து ரூ.250 கோடி வரை செலவிட்டுள்ளனர். குறிப்பாக இலவச மிக்சி, கிரைண்டர் திட்டத்தை கூறலாம்.
நிதிப்பற்றாக்குறையால் முதியவர்களுக்குக்கூட உதவித்தொகை வழங்க முடியவில்லை. கடந்த கால ஆட்சியாளர்கள் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதியை செலவிடாமல் பாசிக், பாப்ஸ்கோ போன்ற அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி இருக்கலாம்.
அனைவருக்கும் இலவசங்கள் வழங்குவதை ஏற்க முடியாது. ஏழைகளுக்கு மட்டும்தான் இலவசங்களை வழங்கவேண்டும். தற்போது ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். சிலிண்டர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க அங்கன்வாடிகள், ரேஷன்கடைகளில் நோட்டீஸ் ஒட்ட உள்ளோம்.
திட்டங்களை நிறைவேற்ற முடியாததால் வருத்தம்
இலவச அரிசியை வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், அரசு அதிகாரிகள், வசதிபடைத்தவர்கள் விட்டுத்தர வேண்டும். அத்தகையவர்களுக்கு 10 நாட்களில் பச்சை நிற ரேஷன்கார்டு வழங்கப்படும்.
துறைமுக முகத்துவாரம் சரிவர தூர்வாரப்படாததால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 வாரத்திற்குள் முகத்துவாரம் தூர்வாரப்பட்டு மீனவர்கள் தொழிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வெற்றிபெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நன்றாக இருந்தது. ஆனால் இப்போது திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் மக்கள் கேள்வி கேட்கும்போது வருத்தமாக உள்ளது. நாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல் பண மதிப்பிழப்பு, மதுக்கடைகள் மூடல், பத்திரப்பதிவுக்கு தடை, ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் நிதி கேட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பலமுறை மத்திய மந்திரிகளை அணுகியுள்ளார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. வசதி படைத்தவர்களுக்கு ஏன் சென்டாக் நிதியுதவி தரவேண்டும்? வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துகேட்டேன்.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் இலவசங்களை வழங்கலாம் என்றுதான் கூறினார்கள். ஓட்டுக்காக அனைவருக்கும் இலவசங்களை வழங்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது. இந்த விஷயத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை முழுமையாக வழங்குவது, விவசாயக்கடன் தள்ளுபடி, புதிதாக விண்ணப்பித்த முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போன்ற கோப்புகள் கவர்னரிடம் உள்ளது. சில கோப்புகளை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Related Tags :
Next Story