பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் ஆட்டோ டிரைவர் கைது
என்.ஆர்.புரா அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு,
இதனால் மனு, மாணவியை பள்ளிக்கு கூட்டி செல்லாமல், அடிக்கடி மறைவான பகுதிக்கு அழைத்து சென்று அவளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த மாணவி, இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். இதனால், அவளுடைய பெற்றோர் அவளை என்.ஆர்.புராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவளை டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக அவளுடைய பெற்றோரிடம் டாக்டர் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவளுடைய பெற்றோர், இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தனர். அப்போது, ஆட்டோ டிரைவர் மனு, தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறினாள். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் என்.ஆர்.புரா போலீசில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மனுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story