உறைபனியில், உருகவைக்கும் கல்வி சேவை
சுஜாதா சாஹூ, அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்த்தவர். ஆசிரியை பணி மீதும் ஈடுபாடு கொண்டவர்.
சுஜாதா சாஹூ, அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்த்தவர். ஆசிரியை பணி மீதும் ஈடுபாடு கொண்டவர். தற்போது டெல்லியில் வசிக்கும் அவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிகிறார். சுஜாதாவுக்கு மலையேற்றம் செய்வதில் ஆர்வம் அதிகம். ஒருமுறை லடாக்குக்கு சென்று அங்கு மலையேற்றம் செய் திருக்கிறார். மலைக்க வைக்கும் மலைப்பயணத்தை ஆர்வமாக தொடர்ந்தவர் அங்கு ஆசிரியர்கள் இரண்டு பேரை சந்தித்திருக்கிறார். அவர்கள் 17 ஆயிரம் அடி உயரமான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான பாட புத்தகங்கள், எழுது பொருட்கள், சீருடைகள், மதிய உணவுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே கீழே இறங்க வேண்டியிருந்திருக்கிறது.
இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் உயரமான மலைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் படிப்புக்காக மெனக்கெடும் ஆசிரியர்களின் அர்ப் பணிப்பு உணர்வு சுஜாதாவை மனம் நெகிழவைத்துவிட்டது. அவர்களுடன் தானும் இணைந்து பணியாற்ற முடிவுசெய்தார். மேலும் ஒருசில பகுதிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை என்பதும் சுஜாதாவுக்குள் ஆசிரியராக தன்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்துவிட்டது. தன்னுடைய கணவர் சந்தீப் சாஹூ மற்றும் நண்பர் தாவா ஜோரா ஆகியோரின் உதவியோடு குதிரைகளுடன் மலையேற்றம் செய்து மாணவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தமான பொருட்களை வழங்கி இருக்கிறார்.
அது பற்றி சுஜாதா கூறுகையில், “மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை 20-க்கும் மேற்பட்ட குதிரைகளின் உதவியோடு கொண்டு சென்றோம். அப்போது மைனஸ் 15 டிகிரிக்கும் கீழான வெப்பநிலையில் உறைபனி சூழ்ந்திருந்தது. அதனால் மலையேற்றம் செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் கொண்டு சென்ற பொருட்களை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்து, வாங்கியதை பார்த்தபோது அந்த கஷ்டமெல்லாம் பனிகட்டிபோல் உருகிவிட்டது” என்று நெகிழ்கிறார்.
சுஜாதா லடாக்கில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்படுத்தி வருகிறார். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழங்கிக்கொண்டிருக் கிறார். மேஜை நாற்காலிகள், மாணவர்கள் விளையாடுவதற்கு வசதியாக விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Related Tags :
Next Story