பண்ருட்டி அருகே சோகம் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் சாவு


பண்ருட்டி அருகே சோகம் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் சாவு
x
தினத்தந்தி 10 Sep 2017 11:15 PM GMT (Updated: 10 Sep 2017 6:53 PM GMT)

பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் மயங்கி விழுந்து இறந்தார்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முகமதுகான் (வயது 85). இவருடைய மனைவி கைரூண்பி (வயது 75). இவர்களுக்கு திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை 11.30 மணி அளவில் கைருண்பி இறந்தார். இதையறிந்த முகமதுகான் கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தினர். இருப்பினும் அவர் பெரும் சோகத்துடனே காணப்பட்டார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் உடனே டாக்டரை வரவழைத்து முகமதுகானுக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணிக்கு அவர் இறந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இறந்த முகமதுகான், கைரூண்பி ஆகியோரின் உடலுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்களுடைய உடல்கள் அங்குள்ள பள்ளி வாசல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இறந்த முகமதுகான், கைரூண்பி தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.


Related Tags :
Next Story