அதவத்தூர் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்


அதவத்தூர் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 10 Sep 2017 10:30 PM GMT (Updated: 10 Sep 2017 9:04 PM GMT)

அதவத்தூர் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா அதவத்தூர் கிராமத்தில் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. பின்னர் திருப்பணிகள் முடிந்தததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூஜைகள் யாக சாலை பூஜையுடன் தொடங்கியன. பின்னர் ஆச்சார்யாள் அழைப்பு, அனுக்ஞை, சங்கல்பம் மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடந்தது.

தொடர்ந்து இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை திருக்கோஷ்டியூர் வெங்கடேச அய்யங்கார் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிநீரை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதில் சின்னத்தம்பி அம்பலம், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இலுப்பக்குடி செல்லையா, ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள், அதவத்தூர் கிராமத்தார்கள் செய்திருந்தனர். 

Next Story