அரியலூர் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி


அரியலூர் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
x
தினத்தந்தி 10 Sep 2017 10:45 PM GMT (Updated: 10 Sep 2017 9:07 PM GMT)

அரியலூர் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடை பெற்றது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட அள விலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டிகளை அரியலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி அசோசியேசன் தலைவர் சத்திய மூர்த்தி தொடங்கி வைத்தார். போட்டிகள் 6, 10, 12, 14, 16 வயதிற்குட்பட்டவர் களுக்கும், 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் என நடத்தப்பட்டன.

போட்டியில் அரியலூர் மாவட்டம் முழுவதும் இருந்து 240 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 28 தங்கம், 27 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் 352 புள்ளிகள் பெற்று வித்யா மந்திர் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. 122 புள்ளிகள் பெற்று அரியலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி அசோசியேசன் அணி இரண்டாம் இடத்தை பெற்றது.

பரிசு

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பரிசுகளையும், பதக்கங்களையும், கோப்பை களையும் வழங்கினார். பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், அரசு வக்கீல் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி அசோசியேசன் செயலாளர் தங்கதுரை கண்ணன், பொருளாளர் தினேஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Next Story