நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி,
தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஜெயசீலன், தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை பொறுப்பாளர் வடிவேல், சுப்பையா, பாஸ்கர், அருண், தாமஸ் மற்றும் மாணவர் பாசறை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story