குலசேகரன்பட்டினம் பகுதியில் பாசி மாலை விற்பனை ஜோர்


குலசேகரன்பட்டினம் பகுதியில் பாசி மாலை விற்பனை ஜோர்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:00 AM IST (Updated: 11 Sept 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பாசி மாலை விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

உடன்குடி,

பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக கருப்பசாமி, முத்தாரம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து வருவார்கள்.

வேடம் அணிவதற்கு முன்பு பக்தர்கள் கடலில் நீராடி, ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பாசி மாலையினை கடல் நீரில் கழுவிய பின்னர், அதனை கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து, அதன் பின்னர் அணிந்து கொண்டு விரதம் தொடங்குவர்.

இதனால் பக்தர்கள் விரும்பி அணியும் துளசி மாலை, உத்திராட்சம் மாலை, பவள மாலை என பல வகையில் உருவான பாசிமாலைகள் உடன்குடி பஜார் மற்றும் குலசேகரன்பட்டினம் பஜார், கடற்கரை பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் வந்து பாசி மாலைகளை வாங்கி செல்கின்றனர்.

1 More update

Related Tags :
Next Story