காவிரி மகாபுஷ்கரம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு ஆய்வு


காவிரி மகாபுஷ்கரம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு ஆய்வு
x
தினத்தந்தி 10 Sep 2017 10:45 PM GMT (Updated: 10 Sep 2017 9:10 PM GMT)

மயிலாடுதுறை காவிரி மகாபுஷ்கரம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி மகாபுஷ்கரம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை நேற்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு, நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது விழா நடைபெற உள்ள இடம், பக்தர்கள் வந்து செல்லும் பாதைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காவிரி மகாபுஷ்கரம் விழாவில் பக்தர்கள் புனிதநீராட அமைக்கப்பட்டுள்ள நிரந்தர நீர்தேக்கத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக்,, துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story