என்.ஜி.ஓ.காலனி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
என்.ஜி.ஓ. காலனி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த முகிலன்விளையை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 60). இவர் முகிலன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி.
சம்பவத்தன்று இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவர் ஜன்னல் வழியாக சாந்தியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தான்.
தப்பி ஓட்டம்
அப்போது கண்விழித்த சாந்தி, நகையை பிடித்துக்கொண்டு, ‘திருடன்... திருடன்...’ என கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதற்கிடையே நகை இரண்டு துண்டுகளாக அறுந்து 3½ பவுன் திருடன் கையில் சிக்கியது. உடனே, கையில் கிடைத்த நகையுடன் மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டான்.
இதுபற்றி செல்லப்பா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.

Related Tags :
Next Story