குறைவாக மீன்கள் கிடைத்ததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம்


குறைவாக மீன்கள் கிடைத்ததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:00 AM IST (Updated: 12 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன்களுக்கு சரியான விலை கிடைக்காதாலும், மீன்களின் வரத்து குறைந்ததாலும் கடந்த மாதம் 29–ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன்களுக்கு சரியான விலை கிடைக்காதாலும், மீன்களின் வரத்து குறைந்ததாலும் கடந்த மாதம் 29–ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

 பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து 100–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடலான மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை கரை திரும்பினர். மிகவும் குறைவான மீன்கள் கிடைத்திருந்ததால் மீனவர்கள் மிகுந்த ஏமு£ற்றம் அடைந்தனர். ஒரு சில படகுகளில் மட்டும் டியூப் கணவாய் மீன்கள் 400–லிருந்து 500 கிலோ வரை கிடைத்ததால் மீனவர்கள் சற்று நிம்மதிஅடைந்தனர்.

இதுபற்றி பாம்பன் விசைப்படகு மீனவர் பேட்ரிக் கூறியதாவது:–

கேரளாவிற்கு கர்நாடகா, ஆந்திரா பகுதியில் இருந்து குறைவான விலைக்கு மீன்கள் அனுப்பப்படுகின்றன.இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் மீன்களுக்கு விலை கிடைக்கவில்லை. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அதுபோல் மீன்கள் வரத்தும் மிகவும் குறைந்து விட்டன. வேலைநிறுத்தத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்று வந்தும் மீனவர்களுக்கு மீன்கள் மிக குறைவாகவே கிடைத்துள்ளன. ஒரு சில படககளில் மட்டும் டியூப் கணவாய் மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. இதனால் சில மீனவர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிஉள்ளனர். மீன்கள் வரத்து குறைந்ததால் பெரும்பாலான படகுகளுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி விசைப் படகு மீனவர்களுக்கு அரசால் மாதம் ஒரு படகிற்கு வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் 1,500 லிட்டரை 3,000–ம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார்.


Next Story