புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைகால நிவாரணம் 20 சதவீதம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் தமிழகம் முழுவதும் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் காயம்பு கலந்து கொண்டு பேசினார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story