நெல்லை பழைய பேட்டையில் சட்டக்கல்லூரி மாணவி கடத்தலா? போலீஸ் விசாரணை

பேட்டை,
நெல்லை பழைய பேட்டை நெல்லையாபுரம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ரூபிகா (வயது 20). இவர் நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 3-வது ஆண்டு பி.ஏ. எல்.எல்.பி. படித்து வருகிறார். இவர் தினமும் பழைய பேட்டையில் இருந்து பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
ரூபிகா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாரியப்பன் பேட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபிகா, அவராகவே எங்கேனும் சென்று விட்டாரா? அல்லது அவரை யாரும் கடத்திச் சென்று விட்டார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story