நீட் தேர்வுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
நீட் தேர்வுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு எதிராக போராட்டம்நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று காலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சந்தனசேகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
பூட்டு போட்டு போராட்டம்; 15 பேர் கைதுபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும். தமிழகம் முழுவதும் நீட் தேர்வை கண்டித்து நடந்த போராட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் திடீரென அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து அலுவலக கதவை அடைத்து பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். அதன் பின்னர் அலுவலகம் திறக்கப்பட்டது.