திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்


திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:15 AM IST (Updated: 13 Sept 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டை,

திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகே டாஸ்மாக் கடை இருந்தது. கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த கடை மூடப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிாப்பு தெரிவித்தும், அந்த கடையை மூடக்கோரியும் கடந்த 7-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கடை மூடப்பட்டது.

இந்நிலையில் அந்த கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அந்த கடையை மூடக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் 20 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா பேசினார்.

பேச்சு வார்த்தை

அவர்களிடம் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியய்யா, இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், டாஸ்மாக் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக திருச்சி கிழக்கு தாசில்தார் தலைமையில் அமைதி பேசு்சுவார்த்தை கூட்டம் நடத்துவது, அதுவரை இந்த கடையை திறக்காமல் மூடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story