பெங்களூரு–ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் தென்மேற்கு ரெயில்வே தகவல்
பெங்களூரு–ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஹவுராவுக்கு சிறப்பு ரெயில்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இருமார்க்கமாக பெங்களூரு கண்டோன்மெண்ட்–ஹவுரா இடையே சிறப்பு கட்டணத்தில் இயங்கும் அதிவிரைவு சிறப்பு ரெய
பெங்களூரு,
பெங்களூரு–ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஹவுராவுக்கு சிறப்பு ரெயில்கள்கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இருமார்க்கமாக பெங்களூரு கண்டோன்மெண்ட்–ஹவுரா இடையே சிறப்பு கட்டணத்தில் இயங்கும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டிஎண்: 06531/06532) இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (வியாழக்கிழமை) இரவு 11.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06531) சனிக்கிழமை காலை 10.55 மணிக்கு ஹவுராவை சென்றடையும். மறுமார்க்கமாக, 18–ந் தேதி ஹவுராவில் இருந்து அதிகாலை 1.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06532) 19–ந் தேதி காலை 11.40 மணிக்கு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இதேபோல், ஒருமார்க்கமாக இயங்கும் வகையில் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (02509) வெள்ளிக்கிழமை காலை 10.55 மணிக்கு ஹவுராவை சென்றடையும். அதேபோல், ஒருமார்க்கமாக இயங்கும் வகையில் ஹவுராவில் இருந்து வருகிற 17–ந் தேதி அதிகாலை 1.05 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (02502) மறுநாள் காலை 11.50 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்டை வந்தடையும்.
ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி கோவிலுக்கு...மேலும், இருமார்க்கமாக பெங்களூரு யஷ்வந்தபுரம்–ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி கோவிலுக்கு வாராந்திர சுவிதா சிறப்பு ரெயில் (82651/82652) இயக்கப்பட உள்ளது. அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (82651) திங்கட்கிழமை இரவு 8.25 மணிக்கு ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி கோவிலுக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை 4 முறை இயங்கும்.
மறுமார்க்கமாக, வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி கோவிலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (82652) வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 10–ந் தேதியில் இருந்து 31–ந் தேதி வரை 4 முறை இயங்க உள்ளது.
மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.