அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் தருவதாக 16 பேரிடம் ரூ.3½ கோடி மோசடி கட்டுமான அதிபர், மகன் கைது
அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் தருவதாக 16 பேரிடம் ரூ.3½ கோடி மோசடியில் ஈடுபட்ட கட்டுமான அதிபர், மகன் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் தருவதாக 16 பேரிடம் ரூ.3½ கோடி மோசடியில் ஈடுபட்ட கட்டுமான அதிபர், மகன் கைது செய்யப்பட்டனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுமும்பை வடலாவை சேர்ந்த கட்டுமான அதிபர் மதுக்கர் மேக்(வயது79). இவரது மகன் தேஜல். இவர்கள் காட்கோபர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டி வீடுகள் விற்பனை செய்ய உள்ளதாக கடந்த 2009–ம் ஆண்டு பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். இதை பார்த்த காட்கோபரை சேர்ந்த துக்காராம் என்பவர் மதுக்கர் மேக்கின் அலுவலகத்திற்கு சென்று 2 வீடுகள் வாங்க பதிவு செய்தார். இதற்காக முன்பணமாக ரூ.20 லட்சம் கொடுத்தார்.
அப்போது 2012–ம் ஆண்டு வீடுகள் வழங்கப்பட்டு விடும் என்று மதுக்கர் மேக்கும், அவரது மகனும் அவரிடம் உறுதி அளித்தனர்.
தந்தை, மகன் கைதுஇதன்பின்னர் 3 வருடங்கள் கழித்து துக்காராம் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுவதாக கூறிய இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கட்டிடம் எதுவும் கட்டப்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த துக்காராம் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் தந்தை, மகன் இருவரும் இதேபாணியில் 16 பேரிடம் ரூ.3 கோடியே 50 லட்சம் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.