நகர பஞ்சாயத்து பகுதியில் ரூ.12 லட்சத்தில் திட்டப்பணிகள் பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்


நகர பஞ்சாயத்து பகுதியில் ரூ.12 லட்சத்தில் திட்டப்பணிகள் பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-25T02:31:09+05:30)

கீழப்பாவூர் நகர பஞ்சாயத்து பகுதியில் ரூ.12 லட்சத்தில் திட்டப்பணிகள் பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்

பாவூர்சத்திரம்,

கீழப்பாவூர் நகர பஞ்சாயத்து பகுதிகளில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், குடிநீர் தொட்டிகள் அமைத்தல், மின் பவர் பம்பு அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகள் ரூ.12 லட்சத்தில் முடிக்கப்பட்டு உள்ளது. இதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி தேவராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி, முன்னாள் துணை தலைவர் குணம், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாஸ்கர், தீப்பொறி அப்பாத்துரை, கணபதி, மதியழகன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story