குமரி மாவட்டத்தில் சாரல் மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் சாரல் மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2017 3:45 AM IST (Updated: 2 Oct 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளன. அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதுபோல நேற்று காலையிலும் சாரல் மழை விழுந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

ஆனை கிடங்கு– 4.2, அடையாமடை– 6, கோழிப்போர்விளை– 5, முள்ளங்கினாவிளை– 16, நாகர்கோவில்– 1, பூதப்பாண்டி– 1, சுருளோடு– 5, பாலமோர்– 8.4 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. இதைப்போன்று அணைப்பகுதிகளில் பேச்சிப்பாறை– 5.6, பெருஞ்சாணி– 4.2, சிற்றாறு 1– 1.6, சிற்றாறு 2– 2, மாம்பழத்துறையாறு– 7, முக்கடல்– 2.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

பேச்சிப்பாறை அணை

மழை நீடிப்பதால் குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் காலை 413 கனஅடி தண்ணீர் வந்தது. தற்போது நீர்வரத்து மேலும் அதிகரித்து 506 கனஅடி தண்ணீர் வருகிறது.

இதுபோன்று பெருஞ்சாணி அணைக்கு 238 கனஅடியும், சிற்றாறு 1 அணைக்கு 6 கனஅடியும், சிற்றாறு 2 அணைக்கு 13 கனஅடி, மாம்பழத்துறையாறு அணைக்கு 2 கனஅடி தண்ணீர் வருகிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 526 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 224 கனஅடி வீதமும் தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு இருக்கிறது.


Related Tags :
Next Story