மணல் கடத்திய 7 லாரிகள் பறிமுதல்; டிரைவர்கள் கைது

நொய்யல்,
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று காலை கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 4 லாரிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர்களான புதுக்கோட்டை மாவட்டம், தச்சாங்குறிச்சியை சேர்ந்த பீட்டர்(வயது 43). திருச்சி மாவட்டம், அய்யனார்புரத்தை சேர்ந்த ராம்குமார்(28), முசிறி அருகே உள்ள ஆமூரை சேர்ந்த தனசேகரன்(24), மணச்சநல்லூர் அருகே உள்ள தலுக்காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்(25) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் கழுகூர் பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர்களான சத்தியமங்கலம் ஊராட்சியில் உள்ள முதலிகவுண்டனூரை சேர்ந்த கோபால்(31), சிவாயம் ஊராட்சியில் உள்ள இரும்பூதிபட்டியை சேர்ந்த பொன்னையன்(32), திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கொளக்குடியை சேர்ந்த மணிகண்டன்(23) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Tags :
Next Story