மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 2 Oct 2017 3:45 AM IST (Updated: 2 Oct 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழகொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதே தெருவில் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டின் முன்பு இருந்த மரத்தில் உள்ள கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, மரத்தின் ஒரு கிளை அருகில் சென்ற மின்சார வயரில் பட்டது.

மின்சாரம் தாக்கி சாவு

இதில் கிருஷ்ணமூர்த்தி மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story