இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய பா.ஜனதா அரசுக்கு துணை போகக்கூடாது. தமிழக உரிமைகளை பறிகொடுக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சத்யன், பெரும்படையார், பொருளாளர் கசமுத்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மாவட்ட அலுவலக செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story