மாயமான வாலிபர் பாலத்திற்கு கீழே பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை
மாயமான வாலிபர் பாலத்திற்கு கீழே பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தையும், பிச்சைநகரையும் இணைக்கும் உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழே நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலக்கரை போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 29-ந்தேதி மாயமான திருச்சி பாலக்கரை பெல்ஸ்கிரவுண்ட் ரெயில்வே குடிசை பகுதி வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(30) என்பது தெரியவந்தது. அவர் தனது தாய்க்கு பதிலாக திருச்சி மாநகராட்சிக்கு துப்புரவு பணிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கணவர் மாயமானது குறித்து அவருடைய மனைவி ரபேக்காள் பெல்சி ஏற்கனவே பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. எனவே, மது குடித்து விட்டு போதையில் அந்தப்பகுதியில் சென்ற போது வாய்க்கால் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட மணிகண்டனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story