ஆனைமலை அருகே முற்றுகை போராட்டம் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 111 பேர் கைது


ஆனைமலை அருகே முற்றுகை போராட்டம் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 111 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2017 4:15 AM IST (Updated: 4 Oct 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே காளியப்பக்கவுண்டனூரில் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 111 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனைமலை,

ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஆத்துப்பொள்ளாச்சி ஆகும். இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமம் காளியப்பக் கவுண்டன் புதூர். இந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் சமுதாய நலக் கூடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந் தனர். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்துவந்தது.

111 பேர் கைது

இந்த நிலையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஆனைமலை முக்கோணம் பகுதியில் பெரியார் திராவிடர்கழக ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் பறையடித்து கோரிக்கை முழக்கங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் அடிப்படை தேவைகளைபூர்த்தி செய்யக்கோரி கோஷமிட்டப்படி வந்தனர். ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது ஆனைமலை இன்ஸ்பெக்டர்சோமசுந்தரம் தலைமையிலானபோலீசார் தடையை மீறிமுற்றுகை போராட்டத்தில் ஈடுபட மு ய ன்ற 55 பெண்கள் உள்பட 111 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story