சார்பதிவாளர் அலுவலகம் மூடப்படுவதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சார்பதிவாளர் அலுவலகம் மூடப்படுவதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

சார் பதிவாளர் அலுவலகம் மூடப்படுவதை கண்டித்து முத்துப்பேட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டையில் 100 ஆண்டுகள் பழமையான சார்பதிவாளர் அலுவலகத்தை மூட கூடாது என பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை சார் பதி வாளர் அலுவலகத்தை, திருத் துறைப்பூண்டி அலுவலகத்தோடு இணைக்க முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்து முத்துப்பேட்டை ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை - மன்னார்குடி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருத் துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய அவைத்தலைவர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக் வரவேற்றார். நாகை முன்னாள் எம்.பி. விஜயன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை மூட நினைப்பதை கைவிட கோரியும், மூட நினைக்கும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

இதில் காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் ஜெகபர்அலி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோமாலிக், வர்த்தக கழக தலைவர் ராஜாராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் தீன்முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் நவாஸ்கான் நன்றி கூறினார். 

Related Tags :
Next Story