டாக்டரை தாக்கிய மேலும் 3 பேர் கைது


டாக்டரை தாக்கிய மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்தவர்கள் நெற்றியில் எண்ணால் எழுதிய விவகாரத்தில் டாக்டரை தாக்கிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு, பரேல் ரெயில் நிலையங்களை இணைக்கும் நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் வகையில் பிரேத பரிசோதனை அறை ஊழியர்கள் அவர்களின் நெற்றியில் நம்பரை எழுதி வைத்தனர். இது பலியானவர்களின் குடும்பத்தினர் இடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் பிரேத பரிசோதனை அறைக்குள் நுழைந்து அங்கு பணியில் இருந்த டாக்டர் ஹரிஷ் பாதக்கை தாக்கினர். மேலும் அவரது நெற்றியில் 0 எண்ணை எழுத முயன்றனர். இது குறித்த புகாரின்பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜித்தேந்திரா குல்கர்னி, நிலேஷ் துமால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புனேயை சேர்ந்த காகா கெய்க்வாட்(28), ரவிகிரண் காட்கர்(32), விராரை சேர்ந்த விஷால்(30) ஆகிய 3 பேரை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர்.


Next Story