பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் பணமோசடியில் ஈடுபட்டதாக பெண் கைது


பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் பணமோசடியில் ஈடுபட்டதாக பெண் கைது
x
தினத்தந்தி 6 Oct 2017 4:15 AM IST (Updated: 6 Oct 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உதவியாளர் என கூறி கொண்டு பெண் ஒருவர் அவரது ரசிகர்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக காம்தேவி போலீசாருக்கு புகார் வந்தது.

மும்பை,

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உதவியாளர் என கூறி கொண்டு பெண் ஒருவர் அவரது ரசிகர்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக காம்தேவி போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த விதவை பெண் ரேவதி காரே (வயது 55), பாடகி லதா மங்கேஷ்கரின் உதவியாளர் என கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ரேவதி காரே சமூகவலைதளம் வாயிலாக லதா மங்கேஷ்கரின் ரசிகர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து பாடகியின் பெயரை பயன்படுத்தி நன்கொடை வசூல் செய்து வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story