2 கோவில்களில் நகை திருட்டு போலீஸ் விசாரணை


2 கோவில்களில் நகை திருட்டு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 Oct 2017 3:45 AM IST (Updated: 6 Oct 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

குடவாசலில் உள்ள 2 கோவில்களில் மர்மநபர்கள் நகையை திருடி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருவீழிமிழலை கிராமத்தில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 3-ந் தேதி பூஜை செய்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது காத்தாயி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ½ பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் அதே பகுதியில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2 கிராம் தங்க நகை, பித்தளையால் ஆன சூலம் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர். இதேபோல அப்பகுதியில் உள்ள பத்திவள்ளஸ்வரர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். அவர்களால் உண்டியலை உடைக்க முடியவில்லை. இதனால் உண்டியலில் உள்ள பணம் தப்பியது. இந்த சம்பவம் குறித்து எரவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story