மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் உரியவரிடம் ஒப்படைப்பு


மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 7 Oct 2017 4:15 AM IST (Updated: 6 Oct 2017 11:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரேமா. இவர் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

திருவள்ளூர்,

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரேமா. இவர் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு மாருதி நகரில் 2 ஆயிரத்து 90 சதுர அடி உள்ளது. அந்த நிலத்தை பார்க்க சென்றபோது அந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் வேப்பம்பட்டை சேர்ந்த பச்சைமுத்து, நடராஜன் ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரேமா சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் போலீசார் பச்சைமுத்து, நடராஜன் ஆகியோரை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்த அசல் ஆவணங்களை மேற்கண்டவர்களிடம் இருந்து கைப்பற்றினார்கள்.

அந்த அசல் ஆவணங்களை நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பிரேமாவிடம் வழங்கினார். அப்போது அவருடன் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானவேல், இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story