வாக்காளர் சேர்ப்பு பணியில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் தி.மு.க. மாவட்ட செயற்குழு தீர்மானம்


வாக்காளர் சேர்ப்பு பணியில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் தி.மு.க. மாவட்ட செயற்குழு தீர்மானம்
x
தினத்தந்தி 8 Oct 2017 2:30 AM IST (Updated: 7 Oct 2017 7:57 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் சேர்ப்பு பணியில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. நெல்லை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி,

வாக்காளர் சேர்ப்பு பணியில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. நெல்லை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் எம்.பி. தங்கவேலு, முன்னாள் எம்.எல்.ஏ ரசாக், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

வருகிற 8 மற்றும் 22–ந் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணியில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும். தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பள்ளி மாணவர்களை அழைத்து அவர்களை பலமணி நேரம் காக்க வைக்கும் அரசை கண்டிக்கிறோம். அடுத்த மாதம் (நவம்பர்) 20–ந் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி அமைப்பாளர் கோமதி நாயகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், நகர செயலாளர் சாதிர், கல்லூரணி செயலாளர் சீனித்துரை, சீவநல்லூர் சாமித்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story