நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது 20 பவுன் நகை, 4 மடிக்கணினி பறிமுதல்


நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது 20 பவுன் நகை, 4 மடிக்கணினி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, 4 மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது.

வடவள்ளி,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தன. எனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தர விட்டார்.

அதன்பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி மேற்பார்வையில் போலீசார் தொண்டாமுத்தூர்-வடவள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள், தொண்டாமுத்தூரை சேர்ந்த உதயகுமார்(வயது 28), துடியலூரை சேர்ந்த செந்தாமரைகண்ணன்(28) என்பது தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர், சுண்டப்பாளையம் பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, 4 மடிக்கணினி, 4 டி.வி. ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். எனவே வேறு பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங் களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story